search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

    கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஓடையில் தடுப்பணை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவந்திபட்டி ஊராட்சி கரிசல்குளம் கிராமம் அருந்ததியர் சமுதாய மக்கள் நேற்று காலை தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.

    மனுவில், கோவில்பட்டி அருகே கரிசல்குளம் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தரமாக குடியிருந்த வருகிறோம். எங்கள் தெருவில் சாலை அமைத்து பல ஆண்டுகளாகிவிட்டது. இதனால், சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக மக்கள் நடமாட முடியாத நிலையில் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையில், பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

    மேலும், எங்கள் தெருவுக்கு அருகே உள்ள ஓடையில் இருந்து வெளியேறும் மழைநீர் எங்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே, எங்கள் தெரு சாலையை சீரமைத்து பேவர் பிளாக் பதித்து, கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். மேலும், அருகே உள்ள ஓடையின் இருபுறங்களிலும் தடுப்பணை அமைக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திலும், உதவி கலெக்டர் அலுவலகத்திலும் அவர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
    Next Story
    ×