search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்திந்திய மாணவர்-இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்தபடம்.
    X
    அனைத்திந்திய மாணவர்-இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

    விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து: மாணவர்-இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

    புதுடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திருவாரூரில் மாணவர்-இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவாரூர்:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் நாடு தழுவிய போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி புதுடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் அனைந்திந்திய மாணவர்-இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன், மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் மாணவர்-இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் நல்லசுகம், செந்தில்குமார், பாக்யராஜ், கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விவசாயிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு காரணமாக இருந்த மததிய அரசை கண்டித்தும், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திட கோரியும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்திம் கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×