search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருவாரூர் மாவட்டத்தில் 100 இடங்களில் சாலை மறியல் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவிப்பு

    வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் 100 இடங்களில் சாலை-ரெயில் மறியல் வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் கூறினார்.
    திருவாரூர்:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப றெ வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டிப்பது. இந்த அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் போராடும் 1 கோடியே 50 லட்சம் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது. 100 நாள் வேலை திட்டத்தினை 200 நாட்களாக அதிகரித்து தினக்கூலியை உயர்த்தி வழங்கிட வேண்டும்.

    இந்த திட்டத்தை நகர்புறங்களுக்கும் விரிவுப்படுத்திட வேண்டும். ஏழை, எளிய குடும்பங்கள் அனைவருக்கும் கொரோனா கால நிவாரணமாக ரூ.7, 500 வழங்கிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5-ந்தேதி திருவாரூர் மாவட்டத்தில் 100 இடங்களில் சாலை-ரெயில் மறியல் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்திற்கு அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் ஆதரவு அளித்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×