search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் உதயகுமார்
    X
    அமைச்சர் உதயகுமார்

    மத்திய குழுவின் ஆய்வு தள்ளிப்போகிறது- அமைச்சர் உதயகுமார்

    நிவர் புயல் பாதிப்பு குறித்து பார்வையிட இருந்த மத்திய குழுவின் ஆய்வு தள்ளிப்போவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    வங்கக் கடலில் உருவான நிவர் புயலானது புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதன் விளைவாக சென்னை, கடலூர், செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து கிடக்கின்றன. இதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    நிவர் புயல் சேதங்களைக் கணக்கிட மத்திய குழு நேற்று தமிழகம் வருவதாகவும், அவர்கள் இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், சென்னையில் உள்ள மாநில பேரிடர் மீட்பு மையத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நிவர் புயல் பாதிப்பு குறித்து பார்வையிட இருந்த மத்திய குழுவின் ஆய்வு தள்ளிப்போகிறது. நேற்று வருவதாக இருந்த மத்திய குழுவினர் டிசம்பர் 5-ந்தேதி தமிழக வர உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×