search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    தென்மாவட்ட மக்கள் வெளியே செல்ல வேண்டாம்- முதலமைச்சர் வேண்டுகோள்

    மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட தென் மாவட்டங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் இதுவரை பெய்த வடகிழக்கு பருவமழையின் அளவு, பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:

    * புதிதாக புயல் உருவாவதையொட்டி போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம்.

    * டிசம்பர் 4 வரை பெருமழை, புயல் வீசக்கூடும் என்பதால் தென்மாவட்ட மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க செல்ல வேண்டும்.

    * மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம்.

    * அண்டை மாநில கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் அந்தந்த மாநில கரையை அடைய வேண்டும்.

    * ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை நீர்படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    * மின்கம்பிகள், தெருவிளக்கு கம்பிகள், மின்மாற்றிகள் அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம்.

    * கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி மருந்து, பசுந்தீவனங்களை போதிய அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

    * மீட்பு படையினர் ஜேசிபி வாகனங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகளுடன் பாதிப்பு ஏற்படும் இடங்களில் முகாமிட வேண்டும்.

    * கூடுதலாக ஆயிரம் மின்வாரிய பணியாளர்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    * கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

    * கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் தலா 2 வீதம் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×