search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ படிப்பு கலந்தாய்வு
    X
    மருத்துவ படிப்பு கலந்தாய்வு

    தவறவிட்ட அரசு பள்ளி மாணவர்களுக்காக மருத்துவ இடங்கள் அதிகரிப்பு?

    அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பை தவற விட்ட நிலையில், அதை ஈடுகட்டும் வகையில் மருத்துவ இடம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
    மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் நீட் தேர்வு காரணமக குறைந்த அளவிலேயே சேர்ந்ததால், 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கான அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதல் வாங்கப்பட்டது.

    இதனால் 2020-2021 கல்வியாண்டில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அமலுக்கு வந்தது. இதனால் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் சேர்ந்தனர்.

    சில மாணவ - மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடம் கிடைத்தது. ஆனால், வருடத்திற்கு சுமார் 10 லட்சம் வரை செலவாகும் என்பதால் பெரும்பாலான மாணவ - மாணவிகள் தனியார் கல்லூரிகள் சேரும் வாய்ப்பை கைவிட்டனர்.

    இதுகுறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப படிப்புக்கான செலவை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தனியார் பள்ளிகளில் சேர்வதற்கான வாய்ப்பை தவறவிட்டதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்த நிலையில்தான் அரசு செலவை ஏற்கும் என முன்னதாகவே கூறியிருந்தால், நான் பல் மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பேன். எனக்கு பல் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு வழங்க வேண்டும் என ஒரு மாணவன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு மாணவர்களுக்காக மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பு உள்ளது. இதை உறுதிய செய்ய இன்னும் இரண்டு நாட்கள் காலஅவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனால் கோர்ட் அரசுக்கு டிசம்பர் 4-ந்தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது. மேலும், கல்வி கட்டணத்தை அரசே ஏற்கலாம் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×