search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன்
    X
    அமைச்சர் செங்கோட்டையன்

    அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுமா?- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

    அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுமா? என்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.
    சென்னை:

    இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால் நாடு முழுவதும் பள்ளி-கல்லூரிகளை மூட கடந்த மார்ச் 16-ந்தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

    பின்னர் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதால், இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அதேநேரம் புதிய கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பல பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

    கடந்த ஜூன் 8-ந்தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நாளை மறுநாள் அறிக்கை வழங்கப்படும்.

    * முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை தந்த 5 நாளில் பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

    * அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது.

    * அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறுவது மக்கள் கையில்தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×