search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சேலம் உருக்காலை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

    தனியார் மயமாக்கும் முடிவை கைவிட கோரி சேலம் உருக்காலை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கிட மத்திய அரசு மேற்கொண்டு உள்ள நடவடிக்கையை கண்டித்தும், தொழிலாளர் சட்டம் திருத்தப்பட்டு உள்ளதை திரும்ப பெற வலியுறுத்தியும், புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் நேற்று வேலைநிறுத்த போரட்டம் நடைபெற்றது. அதன்படி தமிழகத்தில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதனால் உருக்காலையில் பணியாற்றும் சுமார் 90 சதவீதம் தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை.

    மேலும் உருக்காலையின் பிரதான நுழைவு வாயிலின் முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் உருக்காலை தொ.மு.ச. தலைவர் பெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தினால் சேலம் உருக்காலையில் ஆயிரம் டன் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதாக தொ.மு.ச. தலைவர் பெருமாள் தெரிவித்தார். மேலும் சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடும் வரை தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
    Next Story
    ×