search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை நிலவரம்
    X
    வானிலை நிலவரம்

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அரபிக் கடலில் விழுந்த விமானம், இட ஒதுக்கீட்டு வழக்கு தீர்ப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, விமான விபத்து, இடஒதுக்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    # சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு கிடையாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    # இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் பங்கேற்க வருமாறு உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

    # தடையை மீறி டெல்லி நோக்கி பேரணி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.

    # டெல்லி நோக்கி டிராக்டர்களில் பேரணி செல்லும் விவசாயிகள் பல நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை தங்களுடன் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் போராட்டம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    # இந்திய கடற்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பைலட் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். மற்றொரு பைலட்டை தேடும் பணி நடைபெறுகிறது.

    # இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது. இதுவரை 87.18 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 1.35 லட்சம் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 4.55 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    # நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கக்கடலில் வரும் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    # சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருப்பு இருப்பதால் வரும் கோடைகாலத்தில் போதுமான குடிநீர் வழங்க முடியும் என்று பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    # நிவர் புயலுக்கு தமிழக அரசு எதிர்பார்த்ததை விட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பாதிப்பு குறைவாக காணப்பட்டது என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

    # வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடரும் என்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    # ஜோ பைடன் வெற்றியாளர் என தேர்வாளர் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என டிரம்ப் கூறியுள்ளார்.

    # ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டு உள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    # தான் சிறுவயதில் படம் பார்த்த பழைய தியேட்டர் குறித்து இயக்குனர் மிஷ்கின் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். லாபம் இல்லாததால் தியேட்டரை இடிக்கப்போகிறார்கள் என்ற தகவல் அறிந்த வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×