search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிவர்புயல்
    X
    நிவர்புயல்

    நிவர் புயல் - சென்னை புகைப்படங்கள்

    நிவர்புயல் காரணமாக சென்னையில் வெறிச்சோடியபகுதிகளும், மெரினா கடற்கரையும் படத்தில் காணலாம்
    சென்னை

    வங்க கடலில் உருவான நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி  நள்ளிரவில் கரையைக் கடக்க தொடங்கியது.  புயல் கரையை கடப்பதற்கு முன்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழையை கொடுத்தது.  புயல் கரையைக் கடக்க தொடங்கிய  பின்னரும் சென்னை உள்பட வட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது.

    இதனிடையே, அதி தீவிர புயலாக இருந்த நிவர், தீவிர புயலாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிவர்புயல்

    சென்னையில் நேற்று மதியம் பேய்க்காற்றுடன் பலத்த மழை பெய்தபோது, மரங்கள் தலைவிரித்து ஆடியதை படத்தில் காணலாம்
    ( இடம்- மெரினா).


    நிவர்புயல்


    சென்னையில் நேற்று மதியம் பேய்க்காற்றுடன் பலத்த மழை பெய்தபோது, மரங்கள் தலைவிரித்து ஆடியதை படத்தில் காணலாம்
    ( இடம்- மெரினா).

    நிவர்புயல்


    சென்னை மெரினா கடற்கரை சாலையில் சாய்ந்த மரங்களை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்ட போது எடுத்த படம்.

    நிவர்புயல்


    சென்னை மெரினா கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களிடம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ,இது இயற்கையை ரசிக்கும் நேரம் அல்ல. ஆபத்தான நேரம் என்று கூறி அறிவுரை வழங்கிய காட்சி.

    நிவர்புயல்

    சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ' நிவர்' புயல் நகர்வுகள் குறித்து நிருபர்களிடம் விளக்கிய காட்சி.

    நிவர்புயல்


    கடந்த 8 மாதமாக கொரோனா பரவுகிறது என்றார்கள், இப்போது 5 நாட்களாக நிவர் புயல் வருகிறது என்கிறார்கள், என்னடா வாழ்க்கை என்ற சோகத்தில் அமர்ந்திருக்கும் பெண். (இடம் : அயனாவரம்)

    நிவர்புயல்


    சென்னை பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் முன்பு சூழ்ந்த மழை வெள்ளம்

    நிவர்புயல்


    கொரானா ஊரடங்கு போல நிவர் புயலின்  காலரணமாக காலியான மவுண்ட் பூந்தமல்லி சாலை இடம் போரூர்

    நிவர்புயல்


    சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் அவசர கட்டுப்பாட்டு மையம் பரபரப்பாக இயங்கிய காட்சி.






    Next Story
    ×