
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது படேல் (71), இன்று அதிகாலை காலமானார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அவர், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.
அகமது படேல் மறைவுக்கு கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் மூத்த தலைவரும், மதிப்பிற்குரிய சக ஊழியருமான அகமது படேல் அவர்களின் மறைவில் நான் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறேன்.
காங்கிரஸ் கட்சிக்கும், நாட்டிற்கும் அவர் அளித்த பங்களிப்பு அளவிட முடியாதது. அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.