search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிணற்றில் தவறி விழுந்த கரடி
    X
    கிணற்றில் தவறி விழுந்த கரடி

    களக்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த கரடி

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த கரடியை பிடித்த வனத்துறையினர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளம் கால்பரவு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 2 கரடிகள் சுற்றி திரிந்தன. அவற்றில் ஆண் கரடியானது அங்குள்ள தரைமட்ட கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. சுமார் 15 அடி ஆழமுள்ள கிணற்றில் கிடந்த தண்ணீரில் கரடி தத்தளித்தது. உடனே மற்றொரு கரடி பொத்தை பகுதிக்கு ஓடி விட்டது. இதனைப் பார்த்த விவசாயிகள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனத்துறையினர் விரைந்து சென்று, கிணற்றில் தத்தளித்த கரடியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக கால்நடை மருத்துவர் துப்பாக்கி மூலம் கரடிக்கு மயக்க மருந்து ஊசி செலுத்தினார்.

    பின்னர் கிணற்றுக்குள் இரும்பு கூண்டு இறக்கப்பட்டது. அப்போது கிணற்றில் இருந்த கரடி திடீரென்று இரும்புகூண்டின் மீது தாவி ஏறி, அங்கிருந்து கிணற்றுக்கு வெளியே குதித்து ஓடியது. இதனால் அங்கு நின்ற வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர். அங்கிருந்து ஓட்டம் பிடித்த கரடி சிறிதுதூரத்தில் இருந்த பச்சையாறு புதர் பகுதியில் பதுங்கியது. பின்னர் அது சிறிதுநேரத்தில் மயங்கியது.

    இதையடுத்து வனத்துறையினர் அந்த கரடியை பிடித்து சென்று, அதற்கு சிகிச்சை அளித்து செங்கல்தேரி வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
    Next Story
    ×