
‘நிவர்’ புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “நிவர் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியுடன் கேட்டறிந்தேன்.
புயல், மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.