search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் முக ஸ்டாலின்
    X
    திமுக தலைவர் முக ஸ்டாலின்

    கட்டண பிரச்சனையால் மாணவிகள் பாதிப்பு- முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

    கட்டண பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவக்கல்வியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    கட்டண பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவக்கல்வியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை முதலமைச்சர் அலுவலகத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அளித்தனர்.

    7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட பலருக்கு கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது.

    கட்டண பிரச்சனையால் தங்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடங்களை சிலர் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    ஏற்க மறுத்த மாணவ, மாணவிகளுக்கு உதவ மீண்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


    Next Story
    ×