
அந்த வகையில் கடந்த 20-ந்தேதி கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து நேற்று அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் நின்றனர். பின்னர் அவர்கள் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பழனி அடிவாரம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.