search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புகையிலை பொருட்கள் விற்ற 29 பேர் கைது

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் விற்ற 29 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் பல்வேறு இடங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக தஞ்சை நகர கிழக்கு, மேற்கு, தெற்கு, தாலுகா மற்றும் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பழைய பஸ் நிலையம், பூக்கார வஸ்தா தெரு, ராமநாதன் ரவுண்டானா, சுந்தரம் நகர், ரெட்டிபாளையம் ரோடு, வடக்கு வாசல், கரந்தை ரோடு, அய்யங்கடை தெரு, ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர்கள் 8 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதே போல் மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் சேதுபாவாசத்திரம் பகுதியில் 2 கடைகள், பட்டுக்கோட்டை பகுதியில் 2 கடைகள் ,தோகூர் பகுதியில் 2 கடைகள், சுவாமிமலை பகுதியில் 3 கடைகள், கும்பகோணம் கிழக்கு,மேற்கு பகுதியில் 4 கடைகள், பட்டீஸ்வரம் பகுதியில் ஒரு கடை, கும்பகோணம் தாலுகா பகுதியில் 5 கடைகள், திருவிடைமருதூர் பகுதியில் 2 கடைகள் என 21 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 21 கடைகளின் உரிமையாளர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×