search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியல்
    X
    வாக்காளர் பட்டியல்

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2,493 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்

    திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2,493 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் இன்று தொடங்கியது.
    திருப்பூர்:

    வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021 தொடர்பாக கடந்த 16-ந் தேதி மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்களை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டார். வரைவு வாக்காளர் பட்டியல்கள் வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலகங்களான சப்- கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகம் உள்பட பல இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இதுபோல் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்க முதற்கட்ட சிறப்பு முகாம்கள் திருப்பூர் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) என 2 நாட்கள் நடைபெறுகிறது.

    இது குறித்து தேர்தல் பிரிவு தாசில்தார் ரவீந்திரன் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 493 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் நாளை (இன்று), நாளை மறுநாள் (நாளை) ஆகிய 2 நாட்கள் காலை 9.30 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் புதியதாக வாக்காளர்கள் பெயர் சேர்க்க படிவம் 6-ல் விண்ணப்பிக்க வேண்டும். இதுபோல் இறந்தவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க படிவம் 7, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்ற படிவம் 8 ஏ-ல் விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த படிவங்களை வாக்குச்சாவடி மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். எனவே இந்த வாய்ப்பினை அனைத்து வாக்காளர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுபோல் அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 2-வது கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×