search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் கடையில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி
    X
    ரேஷன் கடையில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி

    சேலம் செவ்வாய்பேட்டை ரேஷன் கடையில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆய்வு

    சேலம் செவ்வாய்பேட்டை ரேஷன் கடையில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    சேலம்:

    சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள பங்களா தெரு, தாண்டவராயன் தெரு, மன்னர் நந்தவனம் தெரு, ஆதிராமன் நந்தவனம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பங்களா தெருவில் முறையான சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். 40 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறுவதால் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட எம்.எல்.ஏ. உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

    இதைத்தொடர்ந்து தாண்டவராயன் தெரு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது அவர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி அதன் தரத்தை பரிசோதனை செய்தார். பின்னர் ரேஷன் பொருட்கள் வினியோகம் குறித்தும், இருப்பு குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் சாய்பாபா தெரு, தாண்டவராயன் தெரு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குப்பைகளை அள்ளாமல் சாலையோரம் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், அதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் முறையிட்டனர். மாநகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாக தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரன், போன் செய்து குப்பைகளை அகற்றும்படி அறிவுறுத்தினார். அதன்படி அங்கு சாலையோரம் கிடந்த குப்பைகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது கட்சியின் மாநகர செயலாளர் ஜெயக்குமார், பகுதி செயலாளர் பிரகாஷ், வார்டு செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×