search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு

    தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

    தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என அறிவித்த நிலையில் முன்கூட்டியே உருவானது.

    வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் பாதையை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி, காரைக்காலில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இன்று முதல் நவ.25 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவ.24, 25ந்தேதி முதல் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×