search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜகவில் இணைந்த கே.பி.ராமலிங்கம்
    X
    பாஜகவில் இணைந்த கே.பி.ராமலிங்கம்

    மாணவர்களுக்கு கல்வி கட்டணம் வழங்கும் திமுக, பாஜகவில் இணைந்த திமுக முன்னாள் எம்பி உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    மாணவர்களை ஊக்கப்படுத்திய பிரதமர் மோடி, அமித் ஷா வருகையால் தமிழக பாஜகவினர் உற்சாகம், பாஜகவில் இணைந்த திமுக முன்னாள் எம்பி ராமலிங்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    # குஜராத்தில் உள்ள பெட்ரோலிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் காணொளி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி, மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி ஊக்குவித்தார். தொற்று நோய்க்கு மத்தியில் தொழில் முனைவோர் மற்றும் வேலைவாய்ப்புக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.

    # கர்நாடகத்தில் ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டுக்கு தடை விதிக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

    # இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 90.5 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 46,232 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 84.78 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 4.39 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    # காஷ்மீர் எல்லையில் இன்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 

    # சென்னையில் இன்று மாலையில் நடைபெறும் விழாவில் ரூ.62 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்ட பணிகளை உள்துறை மந்திரி அமித் ஷா தொடங்கி வைக்கிறார். அவரது வருகையையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    # உள்துறை மந்திரி அமித் ஷாவின் வருகையால் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அமித் ஷா வருகையால் தமிழ்நாட்டின் விதி மாறும் என பாஜக பொறுப்பாளர்  சி.டி.ரவி கூறி உள்ளார்.

    # திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

    # தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    # தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கியது.

    # அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள பைடன் மனைவியின் கொள்கை முடிவு இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    # அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 4 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    # உலகின் முன்னணி வீரர்கள் 8 பேர் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார். 

    # தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர் சிலம்பரசன், தலையில் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
    Next Story
    ×