search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டிவனம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் மரங்கள் வெட்டப்பட்டு கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    திண்டிவனம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் மரங்கள் வெட்டப்பட்டு கிடப்பதை படத்தில் காணலாம்.

    திண்டிவனத்தில் கோவிலுக்கு சொந்தமான மரங்கள் வெட்டி கடத்தல்

    திண்டிவனத்தில் கோவிலுக்கு சொந்தமான மரங்களை வெட்டி கடத்திய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    திண்டிவனம்:

    திண்டிவனத்தில் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலுக்கு, சந்தைமேடு பகுதியில் பல ஏக்கர் இடம் உள்ளது. இங்கு பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இந்த மரங்களை மர்ம கும்பல் வெட்டி கடத்தி செல்வதாக புகார்கள் எழுந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கிருந்த வேப்ப மரங்களை மர்ம கும்பல் வெட்டி எடுத்துசென்றுள்ளது. இதுபற்றி கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செயல் அலுவலர் ஸ்ரீகன்யா, திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசனிடம் புகார் செய்தார்.

    அதில், லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலின், குழுக்களில் உள்ள ராமானுஜ முதலியார் அறக்கட்டளைக்கு சொந்தமாக ரோஷணை பகுதியில் இடம் உள்ளது. இங்கிருந்து மரங்களை சிலர் வெட்டி எடுத்து சென்றுள்ளனர். அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததுடன், மரத்தடிகள் வாகனங்களில் ஏற்றுவதற்கு தகுந்தாற்போல் துண்டு, துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்தது. திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் உத்தரவின் பேரில், ரோஷணை போலீசார் வழக்கு பதிவு செய்து, மரங்களை வெட்டிச்சென்ற கும்பலை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×