search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கொலை வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

    திருப்பூரில் கொலை வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூரில் கொலை வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்தவர் இளம்பரிதி (வயது 26). திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (30). இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 12-ந் தேதி அங்கேரிபாளையத்தில் உள்ள பிரிண்டிங் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து வந்த பாக்கிய அன்பரசு என்பவரை கல்லால் முகம், தலையில் அடித்து கொலை செய்தனர்.

    இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் அங்கேரிபாளையம் பகுதியில் தொடர்ந்து ரவுடி தனமான செயல்களில் ஈடுபட்டும் பொது அமைதிக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டும் வந்தனர்.

    இளம்பரிதி மீது அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு அடிதடி வழக்கும், ஆனந்த் மீது அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. இவர்கள் இரண்டு பேரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள இளம்பரிதி, ஆனந்த் ஆகியோரிடம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான ஆணை நேற்று வழங்கப்பட்டது.

    திருப்பூர் மாநகரத்தில் பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் இதுவரை 41 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×