search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட்டு
    X
    ஐகோர்ட்டு

    நடிகையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட தொழில் அதிபருக்கு தடை- ஐகோர்ட்டு உத்தரவு

    நடிகையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட தொழில் அதிபர் பவ்னிந்தர் சிங்கிற்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் அமலாபால். இவர், ஏற்கனவே இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டார். இந்த நிலையில், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் பவ்னிந்தர் சிங் என்பருக்கும், அமலாபாலுக்கும் ராஜஸ்தானில் கடந்த 2019-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.

    பின்னர், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் நிறுத்தபட்டது. இந்நிலையில், நிச்சயதார்த்தத்தின் போது அமலாபாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட பவ்னிந்தர் சிங், கடந்த மார்ச் மாதம் அமலாபாலுக்கும், தனக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக கூறியிருந்தார். இதற்கு அமலாபால் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கிவிட்டார்.

    இந்நிலையில், புகைப்படங்களை வெளியிட்ட பவ்னிந்தர் சிங்கிடம், நஷ்டஈடு கேட்டு அமலாபால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், அமலாபாலின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட பவ்னிந்தர் சிங்கிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு வருகிற டிசம்பர் 22-ந் தேதிக்குள் பதில் அளிக்கவும் பவ்னிந்தர் சிங்கிற்கு உத்தரவிட்டார்.
    Next Story
    ×