
இதனையடுத்து சத்தியகீரிஸ்வரர் முன்னிலையில் முருகப்பெருமானின் திருக்கரத்தில் கோவர்த்தனா அம்பிகையிடம் பெற்ற சக்திவேல் சமர்ப்பிக்கப்பட்டது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதனையடுத்து சுவாமிக்கு மகாதீப ஆராதனை நடைபெற்றது. அதைக்கண்டு அங்கு கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து திருவாட்சி மண்டபத்தை சாமி வலம் வந்தார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணி முதல் 5 மணி வரை கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி தவிர்க்கப்பட்டுள்ளது. இதே சமயம் காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அணுமதிக்கப்படுவார்கள். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நாளை 21-ந்தேதி மாலையில் பாவாடை தரிசனம் நடக்கிறது.