search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெண்டைக்காய்
    X
    வெண்டைக்காய்

    திருப்பூரில் காய்கறிகள் விலை சரிவு- ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.20-க்கு விற்பனை

    திருப்பூரில் காய்கறிகள் விலை சரிவடைந்துள்ளது. ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் தென்னம்பாளையம் சந்தை மற்றும் பல்லடம் ரோட்டில் உள்ள காட்டன் மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    நாள் தோறும் இந்த சந்தைக்கு சென்று பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம். பண்டிகை காலங்களில் இந்த சந்தைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். அப்போது ஒரு சில காய்கறிகளின் விலையும் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் தற்போது கடந்த 2 நாட்களாகவே காய்கறி சந்தைகளில், காய்கறிகளின் விலை சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி நேற்று ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் மற்ற காய்கறிகளின் விலையும் சரிவை சந்தித்துள்ளது.

    இது குறித்து காட்டன் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள காட்டன் மார்க்கெட்டில் ஏராளமானவர்கள் சில்லரை மற்றும் மொத்தமாக காய்கறிகள் விற்பனை செய்து வருகிறோம். கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் விலை சரிவை சந்திதுள்ளது. இதற்கு காரணம் தீபாவளி பண்டிகை என்பதால், திருப்பூரில் உள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானவர்கள் சந்தைக்கு வரவில்லை. தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

    இதுபோல் பண்டிகை காலங்களில் காய்கறிகளை விட இறைச்சி மற்றும் மீன் நுகர்வு அதிகம் என்பதும் மற்றொரு காரணமாகும். அதன்படி கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் நேற்று ரூ.20-க்கும், ரூ.120-க்கு விற்பனைக்கு செய்யப்பட்ட அவரைக்காய் ரூ.80-க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் ரூ.60-க்கும், முட்டைகோஸ் ரூ.40-ல் இருந்து ரூ.30-க்கும், தக்காளி ரூ.30-ல் இருந்து ரூ.20-க்கும், பாகற்காய் ரூ.50-ல் இருந்து ரூ.30-க்கும், முருங்கைக்காய் ரூ.120-ல் இருந்து ரூ.80-க்கும், புடலங்காய் ரூ.40-ல் இருந்து ரூ.20-க்கும், கேரட் ரூ.120-ல் இருந்து ரூ.110-க்கும், பீன்ஸ் ரூ.100-ல் இருந்து ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை சரிவு கவலைஅடைய செய்துள்ளது. இருப்பினும் வருங்காலங்களில் விற்பனை அதிகமாக இருக்கும். விலையும் உயரும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×