search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோரையாற்று பகுதியில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு பணியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    கோரையாற்று பகுதியில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு பணியில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் கலெக்டர் ஆய்வு

    நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் கலெக்டர் ஆய்வு செய்து வெள்ள தடுப்பு பணிகளை பார்வையிட்டார்.
    நீடாமங்கலம்:

    வடகிழக்குபருவ மழையையொட்டி வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன்படி நீடாமங்கலம் அருகே உள்ள கோரையாறு தலைப்பை நேற்று மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கல்லணையிலிருந்து பெரிய வெண்ணாற்று நீர் கோரையாறு தலைப்பை வந்தடைந்து வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு என 3 ஆறுகளாக பிரிவதை பார்வையிட்ட அவர் நீர்வரத்து குறித்தும் பாசனத்துக்கு நீர் பிரித்து விடப்பட்டுள்ளது குறித்தும் பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

    வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கைக்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 500 மணல் மூட்டைகளையும், ஆறுகளின் கரைகளையும் அவர் பார்வையிட்டார். ஆய்வின் போது மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோடி, நீடாமங்கலம் ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்ச்செல்வன், தாசில்தார் மதியழகன், ஒன்றிய ஆணையர் கலைச்செல்வம், கூடுதல் ஆணையர் ஞானம் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இருந்தனர்.

    நன்னிலம் ஒன்றியத்தில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஆய்வு மேற்கொண்டார். நன்னிலம் ஒன்றியத்தில் சொரக்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் சிமெண்ட் சாலை பணி மற்றும் மாட்டு கொட்டகை அமைக்கும் பணி, குவளைக்கால் ஊராட்சியில் வளப்பாற்றில் இணைப்பு பாலம் ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் மகிழஞ்சேரியில் பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் சாலை பணிகளை பார்வையிட்டார். பின்னர் பனங்குடி ஊராட்சியில் நடைபெறும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை பார்வையிட்ட அவர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர், ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி, செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் கண்ணன், வட்டாரவளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் பொற்செல்வி மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.
    Next Story
    ×