search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு துவக்க விழாவில் குத்துவிளக்கேற்றிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா
    X
    பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு துவக்க விழாவில் குத்துவிளக்கேற்றிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா

    தொழில்நுட்ப மாநாடு, சதாப்தி ரெயில் நிறுத்தம், பிச்சை எடுத்தால் தண்டனை உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    பயணிகள் வருகை குறைந்ததால் சதாப்தி ரெயில்கள் நிறுத்தம், பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு துவக்கம், பிச்சை எடுத்தால் தண்டனை உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    # பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் மோடி காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளுக்கான சந்தையை அரசு வெற்றிகரமாக உருவாக்கியிருப்பதாக தெரிவித்தார்.

    # பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவியாக வக்கீல் வானதி சீனிவாசன் இன்று பதவியேற்றார். பதவி ஏற்பு விழா டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் எளிமையாக நடைபெற்றது.

    # ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன்மூலம் மிகப்பெரிய தாக்குதல் சதியை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர்.

    # இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 89.58 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 83.83 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 4.43 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.  உயிரிழப்பு 1.47 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 93.58 சதவீதமாகவும் உள்ளது.

    # சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசன ஆன்லைன் முன்பதிவுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை. இந்த சேவையினை இலவசமாகவே வழங்கி வருகிவதால், பக்தர்கள் பணத்தை கொடுத்து வீணாக ஏமாற வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    # திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நாளை நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    # நாள்தோறும் என்னைப் பற்றி நினைத்தால்தான் மு.க.ஸ்டாலினுக்கு தூக்கம் வரும் என சேலத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

    # அபார ஞாபக சக்தியின் மூலம் தனித்திறனை வெளிப்படுத்திய ஆண்டிப்பட்டியை சேர்ந்த இரண்டரை வயது சிறுவன், இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான்.

    # பயணிகளின் வருகை குறைந்ததால் கோவை-சென்னை, சென்னை- கோவை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் சதாப்தி சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    # ரஷிய நாட்டு தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி கொரோனா பாதிப்பினால் மாஸ்கோவில் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    # இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

    # 4 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முதல்முறையாக பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இடம் பெறுகிறது.

    # நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால், பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவியின் டாக்டர் கனவு நனவாகி உள்ளது. 
    Next Story
    ×