search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி அமைச்சர் காமராஜ் முன்னிலையில் நடந்தபோது எடுத்தபடம்.
    X
    மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி அமைச்சர் காமராஜ் முன்னிலையில் நடந்தபோது எடுத்தபடம்.

    வெள்ள அபாயத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை- அமைச்சர் காமராஜ் தகவல்

    வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ள அபாயத்தை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.
    திருமக்கோட்டை:

    திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள பாளையக்கோட்டை கிராமத்தில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 150-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜீவானந்தம், நகர வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார், முன்னாள் நகரசபை தலைவர் சிவாராஜமாணிக்கம், ஒன்றிய பொருளாளர் ராஜகோபால், திருமக்கோட்டை முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ரஞ்சித்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செங்குட்டுவன், ரேணுகா வெற்றிவேல், ஊராட்சி தலைவர்கள் சுஜாதா ஜெயசீலன், ரமேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை காலத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு லட்சம் காலி சாக்குகள், 16 ஆயிரம் மணல் நிரப்பப்பட்ட மூட்டைகள், சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    3 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவற்றை தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×