search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    மு.க. அழகிரி கட்சி தொடங்கினால் வரவேற்போம்- பாஜக மாநில செயலாளர் பேட்டி

    மு.க. அழகிரி கட்சி தொடங்கினால் வரவேற்போம் மதுரையில் பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

    மதுரை:

    பா.ஜ.க. மாநில செயலாளர் சீனிவாசன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.வின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். அமித்ஷா எந்த மாநிலத்துக்கு சென்றாலும் அங்கு பா.ஜ.க. வெற்றி பெறும். அவர் வருகைக்கு பின் தமிழக தேர்தல் களம் மாறும்.

    பிரதமர் நரேந்திர மோடி மீது தி.மு.க.வுக்கு பயம் உள்ளது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் தான் காரணம் என குற்றம்சாட்டி வருகின்றனர்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விட மு.க.அழகிரி கெட்டிக்காரர். அரசியல் சாமர்த்தியம் உள்ளவர். மு.க.அழகிரி கட்சி தொடங்கினால் பா.ஜ.க. வரவேற்கும்.

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்த எழுத்தாளர் அருந்ததிராயின் நூல் நீக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

    தீவிரவாத கருத்துகளுக்கு ஆதரவாக எழுதி வருபவர் அருந்ததிராய். தீவிரவாதத்துக்கு ஆதரவாக உள்ள நூல்கள் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம் பெறுவது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும்.

    பெரியாருக்கு “யுனெஸ்கோ” விருது வழங்கப்பட்டது என்ற தவறான தகவல் தமிழக பாடத்திட்டத்தில் உள்ளது. ஆனால் அதனை அகற்ற முடியாமல் தமிழக அரசு பயத்தில் உள்ளது.

    கேரளத்தில் உள்ள வைக்கத்தில் ஆலய நுழைவு போராட்டம் நடத்திய பெரியார், தமிழகத்தில் ஏன் நடத்தவில்லை? நாட்டை சீரழிப்பதில் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு முக்கிய பங்குண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×