search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப் ஆதரவு போராட்டத்தின்போது வன்முறை
    X
    டிரம்ப் ஆதரவு போராட்டத்தின்போது வன்முறை

    பட்டாசு வெடிக்காத கிராமம், சபரிமலை நடைதிறப்பு, டிரம்ப் ஆதரவு பேரணியில் வன்முறை உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத மக்கள், சபரிமலை நடைதிறப்பு, டிரம்புக்கு ஆதரவான பேரணியில் வன்முறை உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    * சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பாண்டின் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    * ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு அமைப்பு, கார் மீது 1000 அகல் விளக்குகளை ஏற்றி வைத்து, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தீபாவளி கொண்டாட வேண்டும் என வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

    * டெல்லியில் தடையை மீறி ஏராளமானோர் பட்டாசுகளை வெடித்ததால் காற்றின் தரம் மிகவும் மோசமாகி உள்ளது.

    * இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 88 லட்சத்தை தாண்டியுள்ளது. 82.05 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 1.29 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். தற்போது 4.79 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 

    * தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    * நெல்லை மாவட்டத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கூந்தன்குளம் கிராம மக்கள், பறவைகளின் நலன் கருதி பட்டாசுகளை வெடிப்பதில்லை. 

    * கிருஷ்ணகிரி மாவட்டம் கொளதாசபுரம் கிராம மக்கள் வவ்வால்களின் பாதுகாப்பிற்காக பட்டாசுகளை வெடிப்பதில்லை. வவ்வால்கள் இருப்பதால்தான் தங்களது கிராமம் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர். 

    * தமிழகத்தில் தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வரும் நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா வரும் 21ம் தேதி தமிழகத்திற்கு வர உள்ளார். சென்னை வரும் அவர் பாஜக நிர்வாகிகளை சந்தித்து சட்டசபை தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    * கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய்மொழி தமிழ் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறுவது கண்டனத்திற்கு உரியது என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    * 2030-ம் ஆண்டிற்குள் பெட்ரோல், டீசல் கார்களை முழுவதுமாக தடைசெய்ய இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    * அமெரிக்காவில் தேர்தல் தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் கடும் வன்முறை வெடித்தது. இதில் பலர் காயமடைந்தனர். 

    * பெரு நாட்டில் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிபரை பதவியில் இருந்து நீக்கியதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நடத்திய பேராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

    * ஒலிம்பிக்கில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை சேர்க்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனருமான ராகுல் டிராவிட் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    * லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
    Next Story
    ×