search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகைப்பூ
    X
    மல்லிகைப்பூ

    பூக்களின் விலை உயர்வு- மல்லிகைப்பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனை

    தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிக பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சத்தியமங்கலம், நிலக்கோட்டை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி நிலக்கோட்டை, சத்தியமங்கலம் பகுதியில் இருந்து அதிகளவு பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    திருப்பூரில் நேற்று மல்லிகை பூ கிலோ ரூ. 1, 200-க்கும், முல்லைப்பூ ரூ.1, 000-க்கும், ஜாதி முல்லை ரூ.1, 000-க்கும், சம்பங்கி ரூ. 160-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும், அரளி ரூ.1800-க்கும், சில்லி ரோஸ் கிலோ ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்களின் விலை உயர்ந்து இருந்தபோதிலும் விற்பனை வெகுவாக குறைந்திருந்தது.

    நேற்று பகல் நேரத்தில் மழை பெய்ததாலும், வெளிமாவட்ட தொழிலாளர்கள் திருப்பூரிலிருந்து சொந்த ஊர் நோக்கி சென்று விட்டதாலும் பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இது குறித்து வியாபாரிகள் கூறும்போது ‘பூக்களின் விலை அதிகமாக இருந்தது. மல்லிகைப்பூ ரூ.1, 600-க்கு விற்பனை செய்ய வேண்டும். ஆனால் வாங்குவதற்கு அந்த அளவுக்கு ஆட்கள் இல்லை. அதனால் ரூ.1, 200-க்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எதிர்பார்த்ததைவிட பூ விற்பனை குறைவாக இருந்தது என்றனர்.
    Next Story
    ×