search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்ணத்து பூச்சி பூங்காவுக்குள் செல்ல பார்வையாளர்கள் சமூக இடைவெளி விட்டு நின்ற போது எடுத்தபடம்.
    X
    வண்ணத்து பூச்சி பூங்காவுக்குள் செல்ல பார்வையாளர்கள் சமூக இடைவெளி விட்டு நின்ற போது எடுத்தபடம்.

    7 மாதங்களுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு

    கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா 7 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் சுமார் 25 ஏக்கரில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு திறக்கப்பட்டது. ரூ.9 கோடியில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவில் செயற்கை நீரூற்று குழந்தைகள் விளையாடுவதற்கான ஊஞ்சல்கள், வண்ணத்துப்பூச்சி பற்றிய மாதிரிகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் கடந்த மார்ச் 24-ந் தேதி கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அருங்காட்சியகம், பூங்காக்கள், தியேட்டர்கள் என அனைத்தும் மூடப்பட்டன.

    அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவும் மூடப்பட்டது. தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் அடிப்படையில் சென்னை வண்டலூர் பூங்கா உயிரியல் பூங்கா திறக்கப்பட்டது. இதேபோல் ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா பொதுமக்கள் பார்வையிடும் வகையில் 7 மாதங்களுக்குப் பிறகு நேற்று முதல் திறக்கப்பட்டது. பூங்காவுக்கு வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், மாவட்ட வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து நேற்று காலை ஏராளமான பொதுமக்கள் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வர தொடங்கினர். அவ்வாறு வருபவர்களின் உடலின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர் மேலும் பார்வையாளர்கள் வரிசையில் நின்று டிக்கெட் எடுக்கும் இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் இடப்பட்டிருந்தது.
    Next Story
    ×