search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனுஷ்
    X
    தனுஷ்

    குடமுழுக்கு நடத்த அனுமதி, பட்டாசு வெடித்தால் அபராதம், மைக்கேல் ஜாக்சனாக மாறிய தனுஷ் உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    தமிழகத்தில் குடமுழுக்கு விழாக்களுக்கு அனுமதி, பட்டாசு வெடித்தால் 1000 ரூபாய் அபராதம், மைக்கேல் ஜாக்சனாக மாறிய தனுஷ் உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    * தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ஆயுர்வேத நிறுவனங்களை, பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா காலத்தில் ஆயுர்வேத தயாரிப்புகளுக்கான தேவை உலகளவில் அதிகரித்ததாகவும் அவர் கூறினார். 

    * சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசனில் படிபூஜை உள்பட அனைத்து வழிபாடுகளும் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.

    * தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    * இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 87 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 81.15 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 1.28 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 4.84 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

    * தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காரிருள் மறைந்து அறிவொளி பிறந்து இன்பமும் இனிமையும் நிறைய வேண்டும் என முதலமைச்சர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    * தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனையோ அல்லது ரூ.1000 அபராதமோ விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவில் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    * தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் கோயில்களில் குடமுழுக்கு விழாக்களை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    * கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவருக்கு அவரது பழைய நண்பர்கள் புதிதாக வீடு கட்டிக் கொடுத்துள்ளனர்.

    * துருக்மெனிஸ்தானில் நாட்டு மக்கள் வறுமையில் வாடும் நிலையில், 19 அடி உயரத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட நாய் சிலையை அதிபர் திறந்து வைத்து உள்ளார். இந்த நாய் இனம் துருக்மெனிஸ்தான் நாட்டின் பாரம்பரிய சின்னமாக இருக்கிறது.

    * இந்தியாவும், சீனாவும் தங்களுக்கிடையிலான பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷியா கூறியுள்ளது.

    * அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    * தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தில் இடம்பெற்றுள்ள புஜ்ஜி பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    Next Story
    ×