search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருந்ததி  ராய்
    X
    அருந்ததி ராய்

    அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம், பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம், பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு, ஆன்லைன் வகுப்புக்கு 4 நாட்கள் விடுமுறை உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    * வெளிநாட்டு நிதி பெற விரும்பும் அமைப்புகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செயல்பட்டிருக்க வேண்டும் எனவும், மூன்று ஆண்டுகளில் குறைந்தது ரூபாய் 15 லட்சத்தை நலத்திட்டத்திற்காக செலவிட்டிருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    * இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 86.83 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 80.66 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 1.28 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 92.99 சதவீதமாகவும் உள்ளது.

    * தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என்றும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    * தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 304 பேருக்கும், பி.டி.எஸ். படிப்பில் 91 பேருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    * மே மாதத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருக்க வேண்டிய இடம் எது என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட தேர்தல் வழக்கை மேற்கோள் காட்டி முதலமைச்சர் பேசியிருப்பது விரக்தியில் இருப்பதை காட்டுவதாகவும் அவர் கூறினார்.

    * தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    * தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்காக ஆன்லைன் வகுப்புக்கு இன்று முதல் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    * டிச.2ந்தேதி முதல் முதுநிலை இறுதியாண்டு அறிவியல், தொழில்நுட்ப மாணவர்களுக்காக கல்லூரி, பல்கலைக்கழகம் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    * அருந்ததி ராய் எழுதிய புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு கனிமொழி எம்.பி. மற்றும் ஆர்எஸ் பாரதி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    * இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 8 குழந்தைகளை கொலை செய்தது மற்றும் 10 குழந்தைகளை கொல்ல முயன்றது தொடர்பாக நர்சை போலீசார் கைது செய்துள்ளனர்.

    * இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.

    * நடிகை காஜல் அகர்வால் தனது கணவர் கெளதம் கிச்லுவுடன் கடலுக்கடியில் ஹனிமூன் கொண்டாடி உள்ளார்.

    * கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது மரண பயம் வந்ததாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×