search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் வெற்றியை கொண்டாடிய பாஜகவினர்
    X
    தேர்தல் வெற்றியை கொண்டாடிய பாஜகவினர்

    பள்ளிகளை திறக்க எதிர்ப்பு, என்டிஏ வெற்றி, பைடன் மருத்துவ குழுவில் தமிழக மருத்துவர் உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    தூத்துக்குடியில் ரூ.328.66 கோடி திட்டப்பணிகளுக்கு அடிக்கல், ஜோ பைடன் மருத்துவ குழுவில் தமிழக மருத்துவர் நியமனம், கருத்துக்கணிப்புகளை தகர்த்து வெற்றி பெற்ற பாஜக-ஜேடியு உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    * பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. மெகா கூட்டணி 110 தொகுதிகளை பிடித்தது. 

    * பீகாரில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை தகர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி மெஜாரிட்டிக்கு தேவையான தொகுதிகளை கைப்பற்றியது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு எதிராக சிரக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியதால், சுமார் 75 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது.

    * பீகார் மாநில வாக்காளர்கள் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதாகவும், ஜனநாயகம் எவ்வாறு வலுப்படுத்தப்படுகிறது என்பதை மீண்டும் உலகிற்கு தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறி உள்ளார்.

    * மேற்கு வங்கத்தில் திருவிழா காலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. மனித உயிர்கள் ஆபத்தில் இருக்கும்போது, காப்பாற்ற அனைத்து முயற்சியும் செய்யவேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

    * இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 86 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 80.13 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 4.94 லட்சம் பேர் சிகிச்சையில் உள்னர். உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும் குணமடையும் விகிதம் 92.79 சதவீதமாகவும் உள்ளது.

    * தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.328.66 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    * தூத்துக்குடி மாவட்டத்தில் 12 இடங்களில் அபாயகரமான உலோகங்கள் இருப்பதாகவும், அந்த பகுதிகளை சீர்செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கனிமொழி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

    * வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடும் பலர் தப்பிப்பதற்காக வழக்கறிஞர் மற்றும் போலீஸ் ஸ்டிக்கர்களை ஒட்டுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

    * தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயங்க தொடங்கின.

    * பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோரின் கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர்கள், பள்ளிகளை திறக்க எதிப்பு தெரிவித்துள்ளனர்.

    * அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஜோ பைடன் நியமித்த குழுவில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் செலின் இடம்பெற்றுள்ளார்.

    * அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெற்றுள்ள தோல்வியை டிரம்ப் ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    * ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. வெற்றி வெற்ற மும்பை அணிக்கு வெற்றிக் கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்து.

    * இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான போட்டியை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

    * ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடராஜனுக்கு, நடிகை நயன்தாரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×