search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி பண்டிகை - திருச்சி மன்னார்புரத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதை காணலாம்
    X
    தீபாவளி பண்டிகை - திருச்சி மன்னார்புரத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதை காணலாம்

    திருச்சியில் 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரம்

    தீபாவளியையொட்டி திருச்சியில் 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    திருச்சி:

    தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் திருச்சியில் மத்திய பஸ் நிலையம் பகுதியில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் தீபாவளியையொட்டி திருச்சி வில்லியம்ஸ் சாலையில் சோனா மீனா தியேட்டர் எதிர்புறம், மன்னார்புரம் பகுதியில் மதுரை சாலை மற்றும் கல்லுக்குழி இலுப்பூர் சாலை ஆகிய இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைப்பதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த 3 இடங்களிலும் தகரத்தினால் ஆன கொட்டகை அமைத்து அரசு பஸ்களின் நேர காப்பாளர்கள் அவரும் பகுதிகள் தயார் படுத்தப்பட்டு வருகிறது. சோனா மீனா தியேட்டர் அருகில் இருந்து தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்களும், கல்லுக்குழி இலுப்பூர் சாலையில் புதுக்கோட்டை, காரைக்குடி, ராமேசுவரம் மார்க்கமாக செல்லும் பஸ்களும், மன்னார்புரம் மதுரை சாலையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை இயக்குவதற்காகவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கும் பணிகள் இரண்டொரு நாளில் முடிவடையும். அதன் பின்னர் இந்த தற்காலிக பஸ் நிலையங்கள் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும்‘ என்றார்.
    Next Story
    ×