search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யுஜிசி
    X
    யுஜிசி

    பள்ளிகளை திறக்க கருத்து கேட்பு, பட்டாசுகளுக்கு தடை, விடுதிகளை திறக்க விதிமுறைகள் உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்து கேட்பு, பட்டாசுகளுக்கு தடை, விடுதிகளை திறப்பதற்கான விதிமுறைகள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    # காற்று மாசு மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில், இன்று நள்ளிரவு முதல் வரும் 30ம் தேதி வரை பட்டாசுகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

    # பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க வைக்கப்படவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    # இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 85.53 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,903 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 79.17 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 5.09 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    # தமிழகத்தில் வருகிற 16ந்தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா? என்பது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு நேரடியாக வர முடியாதவர்கள் தபால் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    # தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஆன்லைனில் இன்று தொடங்கியது.

    # கல்லூரிகள் திறப்பு பற்றி 12ந்தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    # எதிர்க்கட்சிகளின் மிரட்டல்களுக்கு அடிபணிந்தே வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருப்பதாக எச்.ராஜா குற்றம்சாட்டினார்.

    # புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க மறுத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிராக கவர்னர் சதி செய்துள்ளார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

    # அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜோ பைடன் தகுதி பெற்றுள்ளபோதிலும், டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். இந்த பிரச்சனைக்கு மத்தியில், வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை ஜோ பைடன் தொடங்கி உள்ளார்.

    # மியான்மர் பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சி முன்னிலையில் உள்ளது.

    # கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் நாளை திறக்க இருப்பதால், ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    # தெலுங்கு சினிமா உலகில் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
    Next Story
    ×