search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

    கிணத்துக்கடவு அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது.
    கிணத்துக்கடவு:

    கோவை மாவட்டம் மதுக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட எட்டிமடை பிரிவு அருகே உள்ள சந்தோஷ் நகரை சேர்ந்தவர் கோபால்(வயது 54). லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தேவி(48). இவர்களது மகன் வைத்தீஸ்வரன்(18). எட்டிமடையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்பு நடந்து வருகிறது. இதனால் கிணத்துக்கடவு அருகே கிழக்கு கோவில்பாளையத்தில் உள்ள தனது மாமா குணசேகரன் வீட்டில் வைத்தீஸ்வரன் தங்கியிருந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்தார்.

    இந்த நிலையில் வைத்தீஸ்வரன் கடந்த 2-ந் தேதி கோவில்பாளையத்தில் தனது மாமா நடத்தி வரும் கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். நெகமம்-கோவில்பாளையம் ரோட்டில் எஸ்.என்.எஸ். பூங்கா நகரில் எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த வைத்தீஸ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவர் மூளைச்சாவு அடைந்தார்.

    இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க பெற்றோரை டாக்டர்கள் கேட்டுக்கொண்டனர். அதன்படி அவர்களும், தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து இதயம், 2 சிறுநீரகங்கள், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை சிறப்பு டாக்டர்கள் குழுவினர் தானம் பெற்றனர். தொடர்ந்து இதயம் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும், 2 சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும். அதன்பின்னர் வைத்தீஸ்வரன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஒவ்வொரு முறையும் புதிய ரகங்களை விதைத்து அதிக விளைச்சல் பெறலாம். வெளியில் சென்று விதைகளை வாங்க வேண்டிய தேவையில்லை. நீங்களே தேவைப்படும் விதைகளை ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். வேளாண் பல்கலைக்கழகத்தில் மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீடு முழுமையாக நிரப்பப்படுவதில்லை. அரசு வேலையில் உள்ள இடங்கள் பூர்த்தி செய்யப்படுவதில்லை. எனவே குழந்தைகளை படிக்க வைத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தம்மம்பதி, சர்க்கார்பதி, திவான்சாபுதூர், வடக்குபாறை மேடு, தெற்கு பாறை மேடு, கணபதிபாளையம், கே.பி.எம். காலனி, வெப்பரை முதலியார்பதி, கல்லாங்குத்து ஆகிய பகுதிகளை சேர்ந்த 107 மலைவாழ் விவசாயிகளுக்கு ஒரு கிலோ தட்டை பயிறு விதை, 2 கிலோ கொள்ளு விதை, மண்வெட்டி, அரிவாள் ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வேளாண் பல்கலைக்கழக விதை மைய உதவி பேராசிரியர் ஆனந்த், வேளாண்மை இணை இயக்குனர் சித்ரா தேவி, ஆனைமலை உதவி இயக்குனர் விவேகானந்தன், வனவர் முருகேசன், ஆனைமலை வட்டார பழங்குடியின மகளிர் நலச்சங்கம் தலைவி பத்மாவதி, இளைஞர் பிரதிநிதி மணிகண்டன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பல்கலைக்கழக விதை மைய உதவி பேராசிரியர் அருள்பிரகாஷ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வாகை சேவை அறக்கட்டளை நிறுவனர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.
    Next Story
    ×