search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின் - கமல்ஹாசன்
    X
    முக ஸ்டாலின் - கமல்ஹாசன்

    கலைஞானி கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி  அவருக்கு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சமூக வலைத்தளம் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

    முத்தமிழறிஞர் கலைஞரால் 'கலைஞானி' என்று போற்றப்பட்ட - எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்கு உரிய நண்பர் கமல்ஹாசன்  அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

    நலமுடன் நீண்ட காலம் வாழ்க!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


    Next Story
    ×