
மதுரையில் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதியும் ஒருவர். இவருக்கு கடந்த சில தினங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து உள்ளது. இதனை தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. உடனே அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து மதுரை ஐகோர்ட்டில் உள்ள மற்ற நீதிபதிகள், அவர்களது உதவியாளர்கள், குடும்பத்தினர், அலுவலக பணியாளர்கள், நீதிமன்ற வளாகத்தில் குடியிருப்பவர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.