search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேல் யாத்திரை
    X
    வேல் யாத்திரை

    இந்தியா-சீனா பேச்சுவார்த்தை, டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை, வேல் யாத்திரை உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    இந்தியா-சீனா கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை, டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை, பாஜகவின் வேல் யாத்திரை உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    * தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நாளை முதல் நவம்வர் 30ம் தேதி வரை டெல்லியில் அனைத்து வகை பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    * திருப்பதியில் மலைப்பாதை வழியாக பக்தர்கள் நடந்துசென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    * எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்காக இந்தியா சீனா படைப்பிரிவு கமாண்டர்கள் அளவிலான எட்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று கிழக்கு லடாக்கில் நடைபெறுகிறது.

    * ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் 829 ஆசிரியர்களுக்கும், 575 மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    * இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 84 லட்சத்தை கடந்துள்ளது.  இதுவரை 77.65 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று மட்டும் 54,157 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.49 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 92.32 சதவீதமாகவும் உள்ளது.

    * 73.5 சதவீதம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே அதிக அறிகுறியற்ற கொரோனா பாதிப்புகள் பதிவாகியிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

    * தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் என்றும் அவர் கூறினார்.

    * தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார். கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் திமுக உள்ளதாகவும்  எல்.முருகன் குற்றம்சாட்டி உள்ளார்.

    * தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் தவறானது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

    * அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. வீரப்பன் என்ற பெயரில் வந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    * அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாவதில் இழுபறி நீடிக்கும் நிலையில், ஜனநாயகக் கட்சியினர் தேர்தல் செயல்முறையை நாசப்படுத்தி விட்டதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.

    * தேர்தல் தொடர்பாக அதிபர் டிரம்ப் உரையாற்றியபோது, பல்வேறு அமெரிக்க ஊடகங்கள் நேரலை ஒளிபரப்பை திடீரென நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. டிரம்ப் தவறான தகவல்களை பரப்புவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    * விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இங்கிலாந்து மந்திரியிடம் மத்திய வெளியுறவு செயலாளர் நேரில் வலியுறுத்தினார்.

    * துபாயில் நடைபெற்ற ஐபிஎல் குவாலிபையர் முதல் ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    * ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத்-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    * பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், பெலிசியானோ லோப்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். நடால் சர்வதேச டென்னிசில் ருசித்த 1000-வது வெற்றி இதுவாகும்.
    Next Story
    ×