search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் வட மாவட்டங்களில் மழை பரவலாக பெய்கிறது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், குமரிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என்றும், ஓரிரு இடங் களுக்கு கனமழைக்கான ‘மஞ்சள் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முதலில் தூறலும், அதன்பின்னர் கனமழையும் பெய்தது.

    நேற்று இரவு முதல் பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி, துரைப்பாக்கம், கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், இதேபோல் ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், வேளச்சேரி போன்ற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    Next Story
    ×