search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    அதிமுக- பாஜக உறவு இணக்கமாக இல்லை: திருமாவளவன்

    வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்ததன் மூலம் அதிமுக- பாஜக அரசியல் உறவு இணக்கமாக இல்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது,

    வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்ததன் மூலம் அதிமுக- பாஜக அரசியல் உறவு இணக்கமாக இல்லை என்பது தெரிகிறது. பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மருத்துள்ளதை வரவேற்கிறேன்.

    காங்கிரசின் யாத்திரைக்கும் பாஜகவின் யாத்திரைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. விவசாயிகளுக்காக காங்கிரஸ் யாத்திரை நடத்துகிறது.  வெறுப்பு அரசியலை பரப்ப பாஜக யாத்திரை நடத்த முயற்சிக்கிறது. ஏதோ ஒரு அழுத்தத்தின் விளைவாக மனுஸ்மிருதி நூல் புழக்கத்தில் இல்லை என்றிருப்பார் கமல்ஹாசன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×