search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
    X
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    பட்டாசு வெடிக்க தடை எதிரொலி... ராஜஸ்தான், ஒடிசா முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

    பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி ராஜஸ்தான் மற்றும் ஒடிசா முதல்வருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலங்களின் முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பட்டாசு உற்பத்தியில் நேரடியாக 4 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக 4 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையால் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் என 8 லட்சம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 

    நாட்டில் பட்டாசு பயன்பாட்டில் 90 சதவீதம் உற்பத்தியை தமிழகம் கொண்டுள்ளது. காற்று மாசு, ஒலி மாசு விதிகளின் படி பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. பசுமை பட்டாசுகளே அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு பிரச்சினை ஏற்படாது. எனவே, பட்டாசு வெடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×