
சென்னையில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற வகையில் அ.தி.மு.க.வில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிக இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெறும் வகையில் இந்த புதிய வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் புதிதாக பகுதி- வட்டக்கழக செயலாளர்களும் இப்போது நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழக நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி, ஆர்.கே.நகர் மேற்கு பகுதி, ஆர்.கே.நகர் தெற்கு பகுதி, பெரம்பூர் கிழக்கு பகுதி, மேற்கு பகுதி, தெற்கு பகுதி என பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் புதிய வட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
ஆர்.கே.நகர் அவைத் தலைவர் - அலெக்ஸ், பகுதி செயலாளர் ஜனார்த்தனம், இணை செயலாளர் ஷகிலா.
ஆர்.கே.நகர் மேற்கு பகுதி அவைத் தலைவர் - கொருக்குப்பேட்டை, அண்ணாநகர் வேலு, பகுதி செயலாளர் நித்யானந்தம், இணை செயலாளர் சாந்தா.
ஆர்.கே.நகர் தெற்கு பகுதி அவைத் தலைவர் - நாகராஜ், பகுதி செயலாளர் சீனிவாச பாலாஜி, இணை செயலாளர் வாசுகி.
அவைத்தலைவர்
பெரம்பூர் கிழக்கு பகுதி அவைத் தலைவர் - கராத்தே சீனிவாசன், பகுதி செயலாளர் ஜே.கே.ரமேஷ், இணை செயலாளர் காயத்ரி தேவி.
பெரம்பூர் மேற்கு பகுதி அவைத் தலைவர் -சூசை, பகுதி செயலாளர் என்.எம்.பாஸ்கர், இணை செயலாளர் புவனேஸ்வரி.
பெரம்பூர் தெற்கு பகுதி அவைத் தலைவர் - மனோகரன், பகுதி செயலாளர் வியாசை இளங்கோவன், இணை செயலாளர் ராமதிலகம்.
ஆர்.கே.நகர் கிழக்குப் பகுதி 39-வது வடக்குவட்ட செயலாளர் குமுதா பெருமாள், மத்திய வட்டம் - மாலா, தெற்கு - கே.பி.கர்ணன், 40-வது வடக்கு வட்ட செயலாளர் புருஷோத்தமன், மத்திய வட்டம் - பன்னீர் செல்வம், தெற்கு - வேலுமேஸ்திரி, 43-வது கிழக்கு வட்ட செயலாளர் அருண் பிரசாத், மேற்கு - சிவக்குமார்.
ஆர்.கே.நகர் மேற்கு பகுதி 38-வது வடக்கு வட்ட செயலாளர் வேல்முருகன், தெற்கு - ராம்மூர்த்தி, 41-வது வடக்கு வட்டம்- யுவராஜ். தெற்கு - விநாயகமூர்த்தி.
ஆர்.கே.நகர் தெற்கு பகுதி 42-வது வடக்கு வட்ட செயலாளர் ஏழுமலை, மத்திய வட்டம் - விஜயகுமார், தெற்கு - கண்ணா, 47-வது வடக்கு வட்ட செயலாளர் நாகூர் மீரான், தெற்கு- ஆனந்தன்,
பெரம்பூர் கிழக்கு பகுதி 34-வது வட்ட செயலாளர் கனகராஜ், மேற்கு- ஆனந்த், 37-வது வடக்கு வட்ட செயலாளர் பசும்பொன் பாஞ்ச்பீர், 37-வது மத்திய வட்ட செயலாளர் மணி, தெற்கு- ராமச்சந்திரன், 46-வது கிழக்கு வட்டம் சரவணன், மத்திய வட்டம் சியான், மேற்கு - கோபிநாத்.
பெரம்பூர் மேற்கு பகுதி 35-வது கிழக்கு வட்டம் பாஸ்கரன், மத்திய வட்டம் ராஜேந்திரன், மேற்கு - இளங்கோவன், 36-வது வடக்கு வட்டம் ஜோசப் வின்சன்ட், மத்திய வட்டம்- லயன்குமார், தெற்கு வட்டம்- அகஸ்டின்.
பெரம்பூர் தெற்கு பகுதி 44-வது கிழக்கு வட்டம் வேல்முருகன், மேற்கு வட்டம் ரமேஷ், கிழக்கு 45-வது கிழக்கு வட்டம் ஹரிகிருஷ்ணன், மத்திய வட்டம்- ரவிச்சந்திரன், மேற்கு - பொன்முடி.
வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தின் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளராக எஸ்.பி.எஸ்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட மகளிர் அணி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, சிறுபான்மை நலப்பிரிவு, மீனவர் பிரிவு நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளராக சதீஷ்பாபு, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளராக எஸ்.ஆர்.அன்பழகன், இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக ஜஸ்டின் பிரேம்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளராக தினேஷ், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளராக குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.