search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான லாரி, வேனை காணலாம்
    X
    விபத்துக்குள்ளான லாரி, வேனை காணலாம்

    திருமங்கலம் அருகே லாரி மீது வேன் மோதல்- டிரைவர், கிளீனர் பலி

    திருமங்கலம் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர், கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    திருமங்கலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பூக்கள் ஏற்றிக் கொண்டு வேன் கொண்டிருந்தது. வேனை ஓசூரை சேர்ந்த டிரைவர் சேகர்(வயது 38) ஓட்டினார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த சாம்ராஜ் (45) கிளீனராக சென்றார். இவர் வேன் முன்பகுதியில் அமர்ந்திருந்தார்.

    இந்த வேன், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் தனியார் மில் அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் ஒரு லாரி காய்கறி ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. காய்கறி லாரியை ஆண்டிபட்டியை சேர்ந்த குமார் ஓட்டி சென்றார். அப்போது பின்னால் வந்த வேன், லாரியை முந்த முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் மோதியது.

    மோதிய வேகத்தில் வேனின் முன்புறம் லாரியின் அடிப்பகுதியில் சிக்கி முன்புறம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் வேன் டிரைவர் சேகர், கிளீனர் சாம்ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்து இருக்கையிலேயே உடல் நசுங்கி பலியானார்கள். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், திருமங்கலம் டவுன் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் தகவல் கிடைத்து விரைந்து வந்த திருமங்கலம் தீயணைப்பு துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    தீயணைப்பு துறையினர் ஜெயராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 4 பேர் சுமார் 1 மணி நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கி இருக்கையில் பிணமாக கிடந்த 2 பேரின் உடலை மீட்டனர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நான்கு வழிச்சாலையில் விபத்து நடைபெற்றதால் போக்குவரத்து சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
    Next Story
    ×