search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே.வாசன்
    X
    ஜி.கே.வாசன்

    ஏ.டி.எம். கொள்ளையை தடுக்க புதிய தொழில்நுட்பத்தை வங்கிகள் கையாள வேண்டும் - ஜி.கே.வாசன் அறிக்கை

    ஏ.டி.எம். கொள்ளையை தடுக்க புதிய தொழில்நுட்பத்தை வங்கிகள் கையாள வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பல்வேறு பாதுகாப்புகள் ஏற்படுத்தியிருந்தாலும் காவலர்கள் இல்லாத சில ஏ.டி.எம்.களில் கொள்ளை முயற்சியில் நடந்துள்ளன. ஏ.டி.எம். அறையில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டிருந்த போதிலும் அவற்றை மறைத்தும் கொள்ளை முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஏ.டி.எம். கொள்ளை நிகழ்வு அடிக்கடி பார்க்கப்படும் நிகழ்வுகளாகி விட்டது.

    ஏ.டி.எம்.-ல் கொள்ளையடித்தால் அது நடக்காது எனும் எண்ணும் அளவுக்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி, அவற்றை பொதுமக்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தெளிவுபடுத்த வேண்டும். ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்களில் பிடிபடுவோருக்கு உடனடியாக கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். இது, ஏ.டி.எம். திருட்டில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். மீண்டும் இதுபோன்ற முயற்சியில் ஈடுபடாதவாறு தடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×