
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நாடு முழுவதும் அரசு வங்கிகளும், தனியார் வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்காக நகரம் முதல் கிராமங்கள் வரை ஏ.டி.எம். எந்திரங்களை நிறுவி இருக்கின்றன.
ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பல்வேறு பாதுகாப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும் காவலர்கள் இல்லாத சில ஏ.டி.எம்.களில் கொள்ளை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முடியாது என்று எண்ணுகிற அளவிற்கு புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி, அவற்றை பொது மக்களும், வங்கி வாடிக்கையாளர்களும் அறிந்து கொள்ளும் வகையில் தெளிவுப்படுத்த வேண்டும்.
காவல்துறையை மட்டுமே நம்பி இருக்காமல் வங்கிகளும் முறையான காவல் பணியை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.