search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்தது

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகம் பெய்துள்ளதால் 32 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகம் பெய்துள்ளது. கடந்த  ஜூன் மாதம் தொடங்கிய பருவ மழை செப்டம்பர் 30-ந் தேதியுடன் முடிவடைந்தது.

    இப்பருவ மழை காலத் தில் 42 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இயல்பான  மழை அளவு 34 செ.மீ. ஆகும். அதைவிட 8 செ.மீ. அதிகம் பெய்துள்ளது.

    சென்னையில் வழக்கத்தைவிட ஒரு சதவீதம் மழை அதிகம்  பெய்துள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை 44 செ.மீ. கிடைக்க வேண்டும். அதைவிட அதிகமாக பொழிந்துள்ளது.

    இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளதால் சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, கிருஷ்ணகிரி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டின.

    மேட்டூர், பவானிசாகர், பாபநாசம், பேச்சிபாறை, பெருஞ்சாணி ஆகிய அணை களில் கணிசமான நீர் இருப்பு உள்ளது.
    இப்பருவ மழை காலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதி களில் கனமழை பெய்ததால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி குறித்த நேரத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    தென்மேற்கு பருவ மழையால் 32 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதம் நடத்திய ஆய்வில் தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.

    அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 2.85 மீட்டர் உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி 2.75, திருச்சி 2.27, திருவள்ளூர் 1.98, கடலூர் 1.91, நாகப்பட்டினம் 1.84, பெரம்பலூர் 1.73, தேனி 1.60, ஈரோடு 1.47, அரியலூர் 1.34, திண்டுக்கல் 1.32, நாமக்கல் 1.30, சேலம் 1.29, செங்கல்பட்டு 1.05 மீட்டர் அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
    Next Story
    ×