
இந்த கிணறுகள் சிவனுடைய பெயரையோ அல்லது இந்திய நதிகளின் பெயரையோ கொண்டுள்ளன. ஆண்டுதோறும் மாசி மக திருவிழாவின்போது மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள்.
கும்பகோணத்தில் ஆன்மிக சுற்றுலா மேற்கொள்ளும் பக்தர்கள் தவறாமல் மகாமக குளத்துக்கு வந்து புனித நீராடி செல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மகாமக குளம் பூட்டப்பட்டது.
தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கும்பகோணத்துக்கு வெளியூர்களை சேர்ந்த பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் மகாமக குளம் பூட்டப்பட்டிருப்பதால் பக்தர்கள் பலர் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பும் நிலை உள்ளது. எனவே மகாமக குளத்தை திறந்து புனித நீராட அனுமதி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.